
மதுரை அனுப்பானடி பிரம்மாலய அரங்கில் ஆத்மஞானி சாந்தாமணி அறக்கட்டளை,
மதுரை அனுப்பானடி பிரம்மாலய அரங்கில் ஆத்மஞானி சாந்தாமணி அறக்கட்டளை, தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச்சங்கம் மற்றும் மதுரை உலகத் தமிழ் மாமன்றம் இணைந்து நடத்திய காந்தியின் 156 வது பிறந்தநாளை முன்னிட்டு நற்குணச் சந்தை கருத்தரங்கம் பண்டிதமணி சாந்தாமணி அம்மையார் தலைமையில் மதுரையில் நடைபெற்றது…உலகத் தமிழ் மாமன்ற தலைவர் காந்தியவதி ம கருப்பையா முன்னிலையில்
ராஜராஜன் கல்விக்குழு இயக்குநர் முனைவர் வேல்மணி ராஜன் வரவேற்றார்…நிகழ்ச்சியில்
பேச்சுப்போட்டி ,கட்டுரை போட்டி, ஓவியப்போட்டிகளில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கத் தலைவர் இரா.துரைமுருகன் சான்றிதழ் மற்றும் அறநூல்கள் வழங்கி பாராட்டி பேசினார்.
அகவை முதிர்ந்த தமிழறிஞர் நல சங்கத்தின் தலைவர் ந.சுப்பையா வாழ்த்துரை வழங்கினார்…
கிராமிய பாடகி மாரியம்மாள் காந்தியை போற்றும் வகையில் புகழ் மாலை சூட்டி பாடல் பாடினார்.தமிழகத்தின்
பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான தமிழறிஞர்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்… நிகழ்ச்சியின் நிறைவாக
யோகி ஸ்ரீ காந்திவாதி கதம்ப ராஜன் நன்றி கூறினார்….